தங்கம் கடத்தியவர்களுக்கு ஆய்வாளர் உதவியதால் பணியிடை நீக்கம் செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட விதிமுறைகளால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுக்க மத்திய அரசு சார்பாக சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களின் மூலம் பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் சம்பவமானது அடிக்கடி நடைபெற்றுள்ளது.
இதில் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா மற்றும் துபாயில் இருந்து வரும் விமானங்களில் தான் அதிக அளவில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருச்சி விமான நிலையத்தில் 1.13 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கடத்தல்காரர்களுக்கு சுங்கத்துறையினர் உதவியதாக புகார் வந்துள்ளது. இதனால் அந்த நேரத்தில் பணியில் இருந்த ஆய்வாளர் அசோக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதற்கான உத்தரவை மத்திய சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.