பஞ்சாப் அணிகள் அதிரடி ஆட்டக்காரரான தீபக் ஹூடாவை குறித்து ,சிஎஸ்கே-வின் ட்விட் ,தற்போது ட்ரென்டாகி வருகிறது .
2021 சீசனின் ஐபில் தொடரில் , நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ,பஞ்சாப் -ராஜஸ்தான அணிகள் மோதின . இந்த போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது .குறிப்பாக இந்த ஆட்டத்தில் கே .எல். ராகுல் – தீபக் ஹூடாவின் ஜோடியின் பார்ட்னர்ஷிப் அதிரடியாக இருந்தது. இருவரும் இணைத்து சிக்ஸர்கள் ,பவுண்டரிகளை அடித்து விளாசினார் .இதில் கே.ல்.ராகுல் 91 ரன்களும் , தீபக் ஹூடா 64 ரன்களும் எடுத்து, இருவருமே அரைசதம் அடித்து விளாசினார் .குறிப்பாக தீபக் ஹூடாவின் ஆட்டமானது வெறித்தனமாக காணப்பட்டது .
எனவே இவரது ஆட்டத்தை பற்றி சிஎஸ்கே ரசிகர்கள் , ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவு தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அடுத்து நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே -பஞ்சாப் அணிகள் மோதுகின்றன . நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஹூடாவின் ஆட்டமானது அதிரடியாக இருந்தது . இதனால் சிஎஸ்கே ரசிகர்களிடம் சற்று பீதியை கிளப்பியுள்ளது. இதை கிண்டல் செய்யும் வகையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘ ஹூடா வேரி குட் டா ஆனா அடுத்த மேட்சுக்கு நோ டா ‘ என்ற ஸ்வீட் தற்போது டிரெண்ட் ஆகியுள்ளது.
Hooda, Very good da but next match ku no da 😅💪#RRvPBKS#WhistlePodu #Yellove 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2021