நடப்பு ஐபில் போட்டி தொடரில் ,முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாழ்த்து தெரிவித்தார் .
14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது கடந்த 9ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன. பரபரப்பான இறுதிகட்டத்தில் ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில், மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. எனவே முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு, பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றன.
ஆர்சிபி-யின் வெற்றி குறித்து , ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்சிபி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆர்சிபி அணியில் ‘தேவ்தத் படிக்கல்’ கூடிய விரைவில் ,ஆர்சிபியுடன் இணைந்தால் மேலும் ஆர்சிபி -யின் பலமானது, பல மடங்காக உயர்ந்து காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.