Categories
தேசிய செய்திகள்

“ஆயுதப் படையை பலப்படுத்த வேண்டும்” உடனடியாக 300 கோடி நிதியை எடுத்துக் கொள்ளுங்கள் – பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய ராணுவத்தின் ஆயுத கொள்முதலுக்கான 300 கோடி நிதியை உடனடியாக பயன்படுத்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புதுரை அமைச்சர் ரஜினந்த் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் டிஏசி என்னும் கூட்டம்  நடைபெற்றது. அக்கூட்டத்தில் வடக்கு எல்லையில் நிலவிக் கொண்டிருக்கும் சூழ்நிலை மற்றும் எல்லைகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஆயுதப் படையினரை வலுப்படுத்துவதற்கான விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

அதில் உடனடி ஆயுத கொள்முதலுக்கான 300 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அத்தகைய சிறப்பு நிதி அதிகாரத்தினை உடனடியாக பயன்படுத்த வேண்டும் என பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிதியில் வாங்க கூடிய ஆயுதங்கள் அனைத்தையும் ஆறு மாதத்திற்குள் முன்பதிவு செய்து ஒரு ஆண்டிற்குள் வாங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |