Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாடிய தல அஜித்…. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் தனது பிறந்தநாளை சிம்பிளான முறையில் கொண்டாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் அப்டேட்டை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் அஜித் தனது 50வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். ரசிகர்களும், திரை பிரபலங்களும் அஜித்தின் பிறந்த நாளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதேபோல் ஆண்டுதோறும் அஜித் தனது குடும்பத்துடன் சிம்பிளான முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அந்தவகையில் அவர் தனது 50வது பிறந்த நாளையும் தன் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் மிகவும் எளிமையாக கொண்டாடியுள்ளார். அப்போது அவர் தன் மனைவி ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் ஷாலினி

Categories

Tech |