Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

திரௌபதி பட இயக்குனருக்கு அஜீத் வாழ்த்தா?

ஆணவ படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக படமாகியிருக்கிறது ‘திரௌபதி மோகன் இயக்கி உள்ளார்.

இந்த படம் சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டது எனவும் இந்த படத்தில் சமூகத்தில் நடக்கும் நாடக காதல் என்ற பெயரில் நிலவும் சம்பவங்களை பற்றி வெளிப்படையாக காட்டி உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.  இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியானவுடன் சோசியல் மீடியாவில் மூன்று நாட்களுக்கு மேலாக டாப் 5 ட்ரெண்டிங்கில் இருந்தது. அது மட்டும் இல்லாமல் பலரும் இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து பாராட்டி தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தார்கள்.

இப்படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு இயக்குனர் மோகனுக்கு நடிகர் அஜீத் போன் செய்து பாராட்டு தெரிவித்ததாக தகவல் பரவியது. அத்துடன் அஜீத்துடன் இயக்குனர் நிற்கும் புகைப்படமும் வெளியானது. அதைக் கண்டு அதிர்ச்சியான இயக்குனர் மோகன் தனது இணைய தள டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருறார்.

இதற்கு இந்த படத்தின் இயக்குனர் மோகன் அவர்கள் கூறியது, இது எல்லாம் வதந்தி. இதை நம்பாதீர்கள். அஜித் எனக்கு போனும் செய்யவில்லை. திரௌபதி படத்திற்காக வாழ்த்தும் சொல்லவில்லை.

மேலும் அஜீத்துடன் நான் இருக்கும் புகைப்படம் 5 ஆண்டுகளுக்கு  முன்பு ஒரு ரசிகனாக அஜீத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம்’ என தெரிவித்திருக்கிறார்.

சினிமா உலகமும், அஜித் ரசிகர்களும் குழம்பி விடக் கூடாது என்பதற்காக தான் ட்விட்டரில் இதை பதிவிட்டு வருகிறேன் என்று கூறி இருந்தார்.

 

Categories

Tech |