Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்! “கையை அறுத்து ரத்தம் சொட்ட சொட்ட” …. “அஜித்” பட அப்டேட் கேட்ட ரசிகர்…. போட்டோ வைரலானதால் பரபரப்பு…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித்‌. இவர் வலிமை படத்தை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க, ஜான் கொக்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படமாக எடுக்கப்படுகிறது என ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் விபரீதமான முறையில் அப்டேட் கேட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது புதுச்சேரி அஜித் ரசிகர்கள் மன்றம் மட்டும் இருக்கும் ஒரு whatsapp குழுவில் அஜித் ரசிகர் ஒருவர் கையை பிளேடால் அறுத்து ஏகே 61 அப்டேட் என்று எழுதி பதிவிட்டுள்ளார். மேலும் வாட்சப் குழுவில் அனுப்பிய வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |