Categories
சினிமா தமிழ் சினிமா

செருப்பு விளம்பரத்தில் கியூட்டிப்பை அஜித்…. காட்டுத்தீ போல் பரவும் வீடியோ…!!

முன்னணி நடிகர் அஜித்தின் செருப்பு விளம்பர வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான அப்டேட்டை வெளியிடக்கூறி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இருப்பினும் படக்குழு இதுவரை எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. தல அஜித் தற்போது இந்த அளவுக்கு உயர்ந்து உள்ளார் என்றால் அதற்கு அவர் ஆரம்பக் காலகட்டத்தில் பட்ட கஷ்டம் தான் காரணம் என்று கூறலாம். அதன்படி அவர் செருப்பு விளம்பரத்தில் நடித்திருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் பலரும் தற்போது யாரும் அசைக்க முடியாத இமயமலை போல் இருக்கும் அஜித் ஆரம்ப கட்டத்தில் எப்படி கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த வீடியோவில் அஜித் மிகவும் க்யூட்டாக இருக்கிறார். இதனை பலரும் ரசித்து வருகின்றன.

Categories

Tech |