ரசிகர்கள் பலர் அஜித்தை எம்ஜிஆர் போல சித்தரித்து போஸ்டர் ஒட்டி அவரது பிறந்த நாள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் மட்டுமின்றி, பல திறமைகளை கைவசம் கொண்டவர். எனவே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்நிலையில் அஜித்தின் ரசிகர்கள் அவரது பிறந்த நாளான இன்று அதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் பலர் அஜித்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர்களை அடித்து ஒட்டி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் அஜித்தை எம்ஜிஆர் போல சித்தரித்து போஸ்டரை உருவாக்கி அதனுடன் மே 1 2021ல் பொன்விழா காணும் எங்களின் பொன்மனச் செம்மலே வாழ்க பல்லாண்டு என்று குறிப்பிட்டுள்ளனர். மதுரையில் பல பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.