Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்த படத்தில் அஜித் நடிக்கவில்லை…. இணையத்தில் பரவும் வதந்திக்கு…. படக்குழு முற்றுப்புள்ளி…!!

மோகன்லால் படத்தில் அஜித் நடிக்கவில்லை என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் தமிழ் சினிமாவில் ஜில்லா, காப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மோகன்லால் “பரோஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் குழந்தைகளுக்கு பிடித்த படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் பிரிதிவ்ராஜ், பிரதாப் போத்தன், பாஸ்வேகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னணி நடிகர் அஜித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வந்தது. ஆனால் இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து, அஜித் இப்படத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரவும் செய்தி வெறும் வதந்தி என்று கூறியுள்ளது.

Categories

Tech |