தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்ளில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”வலிமை” திரைப்படம் உருவாகியுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படம் இந்த மாதம் ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ”அஜித் 61”வது படத்திற்கான பணிகள் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் வினோத் தான் இயக்க இருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் அஜித்துக்கு கதாநாயகியாக பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நடிகை பூஜா ஹெக்டே உடனும் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ”பீஸ்ட்” திரைப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.