அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் டைரக்டில் உருவாகி வரும் திரைப்படம் “துணிவு”. இந்த படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலாகியது. இந்த திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு தயாராகுவதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், உண்மையான கதையில் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகியது.
இவற்றில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் துணிவு படத்தின் முதல் பாடலான “சில்லா சில்லா” பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் இப்பாடல் வெளியான 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை படைத்திருக்கிறது. இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
Time to stream #ChillaChilla, the complete internet sensation across leading music platforms! Stream now🔥💫https://t.co/8enH8d4lWA#Thunivu #ChillaChilla #NoGutsNoGlory pic.twitter.com/Pu6Fm5hiWG
— Boney Kapoor (@BoneyKapoor) December 10, 2022