ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “துணிவு”. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று உள்ளது. இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
அண்மையில் துணிவு படத்திலிருந்து சில்லா சில்லா என்ற முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜிப்ரான் இசையில் அனிரூத் பாடி இருந்த இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் 2-வது பாடல் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் “காசேதான் கடவுளடா” என்ற பாடல் இன்று (18/12/2022) மதியம் 2 மணியளவில் வெளியாக இருக்கிறது. இதை படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
https://twitter.com/GhibranOfficial/status/1604178999004913664?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1604178999004913664%7Ctwgr%5E24211e90c691ee64995e74bb4d8ca3d0c9177198%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FCinema%2FCinemaNews%2Fthunivu-2nd-single-kasethan-kadavulada-to-be-out-at-sunday-2-pm-860110