Categories
சினிமா தமிழ் சினிமா

முதலமைச்சர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தல அஜித்….. இணையத்தில் வைரல்…!!!

முன்னணி நடிகர் அஜித் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிட கூறி ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதன்படி கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் படக்குழு அறிவித்திருந்த படி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட வில்லை.

இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நடிகர் அஜீத் மற்றும் அவரது மனைவியும், பிரபல நடிகையுமான ஷாலினி தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோடு ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |