அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் திரைபடம் தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2015ஆம் ஆண்டு நடிகர் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த படம் ‘வேதாளம்’. அந்த சமையத்தில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது இப்படம் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் அதில் சிரஞ்சீவி நடிக்கஇருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் பணியில் ஈடுபட்டுள்ளார் நடிகர் சிரஞ்சீவி. இதைத்தொடர்ந்து வேதாளம் ரீமேக்கில் நடிப்பார் என கூறப்படுகிறது. இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்க உள்ளார். பில்லா படத்தின் தெலுங்கு ரீமிக்ஸ் சாங் இவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வேதாளம்’ ரீமேக் குறித்த அறிவிப்பு சிரஞ்சீவியின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.