நடிகர் அஜித்தின் ‘வலிமை’ பட டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை ‘. இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கிற்க்கு பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இன்னும் இரண்டு மாதங்களில் முழுவதுமாக ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்த பின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என கூறப்பட்டது . இந்நிலையில் வலிமை படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .