யோகிபாபுவுக்கு அஜித் சொன்ன அட்வைஸை நினைத்து ரசிகர்கள் பெருமைப்படுகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். வரும் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு அஜித் சொன்ன அட்வைஸை நினைத்து ரசிகர்கள் பெருமைப்பட்டு வருகின்றனர்.
யோகிபாபுவுக்கு திருமணமான சில நாட்களில் அவர் வலிமை படத்திற்கு வந்த போது அஜித் அவரிடம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட குடும்பம் ரொம்ப முக்கியம் என்று கூறியுள்ளார். இதனை யோகி பாபு ஏற்றுக்கொண்டு தனது குடும்பத்தை பற்றி உணர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக அஜீத் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்கு தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.