நடிகர் அஜித் வலிமை படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதியபடம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். தற்போது இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வருட ஸ்பெஷல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்கவிருக்கும் அஜித்62 படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அஜீத் அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏற்கனவே நடித்த விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.