‘வலிமை’ படத்திற்கு அஜித்தின் ரீல் மகளான அனிகா சுரேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. இன்று ரிலீஸ் ஆகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை எடுத்து முன் பதிவிலேயே பெரிய சாதனை படைத்துள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#AnikhaSurendran, our favorite child artist who acted with Ajith Kumar in two movies #Viswasam ,YA, wishing fans in Saudi Arabia for organizing the first FDFS for a movie star..#Valimai #AjithKumar @ajithFC pic.twitter.com/jLOkiL0KjS
— KERALA AJITH FANS CLUB (@KeralaAjithFc) February 23, 2022
இந்நிலையில், இந்த படத்திற்கு அஜித்தின் ரீல் மகளான அனிகா சுரேந்திரன் வாழ்த்து தெரிவித்து வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். இவர் அஜித்துடன் விசுவாசம், என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.