மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு விசுவாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக அனிகா நடித்திருப்பார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அனிகா சுரேந்திரன் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். இந்நிலையில் அனிதா சுரேந்திரன் தற்போது படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தற்போது 17 வயதாகும் அனிகா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக ஷாட் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அனிகா சுரேந்திரனின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயசில் இப்படி ஒரு போட்டோ சூட்டா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.