அஜித் தனது மகன் ஆத்விக் உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தல அஜித் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் ”வலிமை” படத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில், நடிகர் அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.
அந்த வகையில், தற்போது அஜித் தனது மகன் ஆத்விக் உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், இந்த புகைப்படத்தில் ஆத்விக் ஹெல்மெட் அணிந்திருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.