‘வலிமை’ திரைப்படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. சமீபத்தில் திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதனையடுத்து, இந்த திரைப்படம் ரிலீசான எல்லா இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில், இதுவரை ‘வலிமை’ திரைப்படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 190 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் வசூல் 200 கோடியை எட்டிவிடும் என தகவல் தெரிவிக்கின்றனர்.