வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் தல அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால்கொரோனாவின் தாக்கத்தால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் ரசிகர்கள் சிலர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் அஜித் ரசிகர்கள் உருவாக்கிய உள்ள ஒரு போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.