அஜித் நடிக்கும் வலிமை அப்டேட்டை அப்படத்தின் வில்லன் கூறியுள்ளார்.
நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரோஷி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடியவுள்ளது. இதற்கிடையில் அஜித் ரசிகர்களின் இப்படத்தின் அப்டேட்டை வெளியிடக் கூரி படக்குழுவினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
படக்குழு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் வலிமை படத்திதை பற்றி கூறியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, வலிமை படத்தில் நான் நடித்தது எனக்கு மிகவும் அற்புதமான அனுபவம். இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதம் உள்ளது. அவற்றை ஸ்பெயினில் எடுக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி அந்நாட்டு அரசின் அனுமதி கிடைத்தவுடன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் என்று கூறியுள்ளார்.