நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தின், “நாங்க வேற மாதிரி” என்ற பாடலின் வரிகள், நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை விட அதிக கமெண்ட்டுகளை பெற்றுள்ளது.
ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்போடு தயாராகி வரும் தல அஜீத்தின் வலிமை திரைப்படத்தை H.வினோத் இயக்குகிறார். எனினும், இத்திரைப்படம் தொடர்பில் எந்த தகவலையும் படக்குழுவினர் நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தனர். எனவே பல நாட்களாக அஜித்தின் ரசிகர்கள் வலிமை படத்தைப் பற்றிய தகவலை வெளியிடுமாறு, செல்லும் இடங்களிலெல்லாம் கேட்டு வந்தார்கள்.
அவர்கள் கிரிக்கெட் மைதானத்தையும் விட்டு வைக்கவில்லை. அதன் பின்பு, ஒரு வழியாக வலிமை படத்தின், First look மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனை ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி உற்சாகம் அடைந்தார்கள். அதாவது, நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே கடும் போட்டியும் சண்டையும் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் “நாங்க வேற மாதிரி” என்ற பாடலின் வரிகளை, நேற்று இரவு 10 மணியளவில் தான் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதற்குள் இப்பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. மேலும் இப்பாடலுக்கு வந்த கமெண்ட்கள், மாஸ்டர் திரைப்படத்தின், “குட்டி ஸ்டோரி” பாடல் வரிகள் வீடியோ பெற்றிருந்த 1.7 லட்சம் கமெண்டுகள் விட அதிக கமெண்ட்டுகளை பெற்றிருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.