நடிகர் அஜித்தின் AK62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர் AK62 படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்கிறீர்களா ?என்று கேட்டுள்ளார். அதற்கு விளக்கம் அளித்துள்ள விஜய்சேதுபதி இந்த கேள்வியை நானும் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கேட்டேன்.
ஆனால் “நீங்கள் என்னுடைய ஹீரோ, உங்களை என்னால் வில்லனாக பார்க்க முடியாது என்று விக்னேஷ் சிவன் கூறிவிட்டார்” என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். எனவே இதன் மூலம் AK62 படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.