Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராம ராஜ்ஜியம் அல்ல, நாதுராம் ராஜ்ஜியம்” – யோகி அரசு குறித்து அகிலேஷ் ….!!

உத்தரப் பிரதேச அரசு மின்சார தொழிலாளர் வைப்பு நிதி ரூ.2,600 கோடியை வங்கிசாரா தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று யோகி ஆதித்தியநாத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார். மேலும் தற்போது நடப்பது ராம ராஜ்ஜியம் (ஆட்சி) அல்ல நாதுராம் (கோட்சே) ராஜ்ஜியம் என்றும் அவர் கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் (Akilesh Yadav) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் மிகவும் பலவீனமானவராக திகழ்கிறார். அவரால் மின்சாரத் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியவில்லை.

 

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற இயக்குநர் வசந்த்…..!!

மின்சாரம் உள்ளிட்ட மிக முக்கிய துறைகள் இன்று நெருக்கடியை சந்தித்துள்ளன. ஆனால் யோகி அரசு அதனை மறைப்பதில் ஆர்வமாக உள்ளது. சமாஜ்வாதி அரசு பதவியில் இருக்கும்போது, டி.ஹெச்.எப்.எல். (DHFL) நிறுவனத்துக்கு தொழிலாளர் வைப்பு நிதி மாற்றப்படவில்லை என்பதை முதல் தகவல் அறிக்கை (FIR) தெளிவாக கூறுகிறது. சமாஜ்வாதி அரசு பதவியில் இருக்கும்போது ஒரு காசு (செம்பு துண்டு) கூட அந்நிறுவனத்துக்கு செல்லவில்லை.

Image result for modi yogi akhilesh yadav

ஆகவே இதற்கு முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் பொறுப்பேற்க வேண்டும். மேலும் இவ்விவகாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அரசு என்ன வேலை செய்து கொண்டிருந்தது?, தற்போது இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) பரிந்துரை செய்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் உண்மை வெளிவராது. உயர் நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் பதவியிலுள்ள நீதிபதியின் மேற்பார்வையில் வழக்கு விசாரணை நடக்க வேண்டும்.

சமாஜ்வாதி ஆட்சியில் தொடங்கப்பட்ட மருத்துவமனையை முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் திறந்து வைக்கவுள்ளார். அதற்கு முன்னதாகவே அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆளும் கட்சியில் தற்போது நடந்த ஊழலுக்கு, ஆண்ட கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும். நாட்டிலும் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது.இப்பிரச்னையை தீர்க்க வேண்டிய அரசோ, அதனை திசை திருப்பும் வேலையை தொடங்கிவிட்டது. நாட்டில் நடப்பது ராம ராஜ்ஜியம் (Ram Rajya) அல்ல, நாதுராம் ராஜ்ஜியம் (Nathu Ram Rajya). மோசமான கட்டமைப்பை நோக்கி உத்தரப் பிரதேசம் நகர்ந்து கொண்டிருக்கிறது இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.

உத்தரப் பிரதேச மாநில மின்சார தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) ரூ.2600 கோடி, டி.ஹெச்.எப்.எல். தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னதாக இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், முந்தைய சமாஜ்வாதி அரசையும், அப்போதைய முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வையும் கடுஞ்சொற்களால் தாக்கி பேசினார்.
“சமாஜ்வாதி அரசை, “ஊழலின் நுழைவு வாயில்” என்று விமர்சித்த அவர் அதன் வழியாக வந்த ஒப்பந்தம்தான் இது” எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |