Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இதை பண்ணுங்க…. அகில பாரத இந்து மகா சபை சார்பில் ஆர்ப்பாட்டம்…. நாகபட்டினத்தில் பரபரப்பு…!!

கோவில் சொத்துக்களை பாதுகாப்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மண்டல இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு நிரந்தர இணை ஆணையரை நியமிக்கக்கோரி அகில பாரத இந்து மகா சபை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் பிரிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இணை ஆணையராக தஞ்சை மாவட்ட இணை ஆணையர் பொறுப்பு வகித்து வருகிறார்.

இதனால் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கோவில் சொத்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் பல கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படாததால் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நிரந்தர இணை ஆணையரை நியமித்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Categories

Tech |