Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கால்வாய் அமைக்கும் பணி” …. தனி நபரின் அலட்சியம்…. நெடுஞ்சாலை துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

வடக்கு ரத வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை நெடுஞ்சாலை துறையினர் அகற்றி உள்ளனர்.

விருதாச்சலம் மாவட்டத்தில் விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சன்னதி வீதி மற்றும் வடக்கு ரத வீதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சாலையை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணியின் போது வடக்கு ரத வீதி சாலையின் ஒரு பக்கத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் கால்வாய் அமைய உள்ள ஒரு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பணிகள் பாதிப்படைந்து பாதியுடன் நின்றது.

இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் கட்டிட உரிமையாளரோ இந்த நோட்டீசை பெற்றுக் கொண்டு கட்டிடத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விருத்தாச்சலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அறிவு களஞ்சியம், உதவி பொறியாளர் விவேகானந்தன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து அகற்றியுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |