Categories
மாவட்ட செய்திகள்

என் அக்காவை யாரோ கொன்னுட்டாங்க… நாடகமாடிய தங்கை… விசாரணையில் திடுக்கிடும் உண்மை…!!!

பூந்தமல்லியில் சொத்திற்கு ஆசைப்பட்டு அக்காவை உடன்பிறந்த தங்கையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காடு சந்திரசேகர் பகுதியில் தெய்வானை(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது தங்கை லட்சுமி என்பவர் நேற்று அதிகாலை மாங்காடு போலீசாரிடம் தனது அக்காவை யாரோ கொலை செய்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு நேரில் வந்தமாங்காடு இன்ஸ்பெக்ட்டர் மற்றும் சில காவல் ஆய்வாளர்கள் அங்கு கத்திக்குத்து காயங்களுடன் ரத்தத்தில்மிதந்து கிடந்த தெய்வானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தங்கையே அக்காவை கொன்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியே வந்தது.

இதைத்தொடர்ந்து லட்சுமியிடம் போலீசார் விசாரித்தபோது பல தகவல்கள் வெளிவந்துள்ளன.தெய்வானை துபாயில் வேலை பார்த்து ஒவ்வொரு மாதமும் தன் மகனுக்கும், தங்கைக்கும் பணம் அனுப்பி வைத்துள்ளார்.  சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவளது மகன் இறந்துள்ளார்.தெய்வானை அனுப்பிய பணத்தில் தான் லக்ஷ்மி குடும்பம் வாழ்ந்து வந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன் தெய்வானை துபாயிலிருந்து சென்னை திரும்பி வந்துள்ளார். அங்கு லக்ஷ்மியின் கணவர் ரமேஷ் குமார் மது அருந்திவிட்டு சண்டை போட்டதால் அவர்கள் இருவரையும் தெய்வானை வெளியேற்றினார்.

அதோடு இந்த சொத்தில் பங்கு இல்லை என்றும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி அவரது சொந்த ஊரில் உள்ள சொத்துக்களையும் அவருக்குத் தர விடாமல் தெய்வானை தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த லட்சுமி மற்றும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து தெய்வானையை கொலை செய்ய திட்டமிட்டனர். அவர்கள் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் அதிகாலை தெய்வானையின் வீட்டின் பின்புறம் உள்ள சுவரில் உள்ளே குதித்தனர். சத்தம் கேட்டு தெய்வானை கத்த லக்ஷ்மி தெய்வானையின் வாயைப் பொத்திக் கொண்டார்.

அதன் பிறகு தான் கொண்டு வந்த கத்தியால் தெய்வானையை மோசமாக குத்திக் கொலை செய்துவிட்டு ரமேஷ் குமாரும் அவரது மனைவியான லக்ஷ்மியும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். வாயை பொத்திய லக்ஷ்மியின் கையை தெய்வானை கடித்ததால் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலையைத் தாங்கள் செய்ததை மறைப்பதற்காக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தான் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் சிலர் வீட்டினுள் நுழைந்து தனது வாயில் மதுவை ஊற்றி கடுமையாக தாக்கி சென்றதாக கூறி இருந்தார்.இந்தப் புகார் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் போலீசார் சந்தேகம் கொண்டு லக்ஷ்மி சிக்கினார். இதனை விசாரித்த போது சொத்து தகராறில் அக்காவை கொன்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லக்ஷ்மியை கைது சென்றனர். தலைமறைவான அவரது கணவரை தேடி வருகின்றனர்.

 

Categories

Tech |