Categories
பல்சுவை

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன.? பின்னணி தகவல் இதோ..!!

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன.? என்பதை பற்றி பார்க்கலாம்.

அக்னி நட்சத்திரம், இந்த வார்த்தையை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்றுக்கொள்வதில்லை. எனினும் இது வானியல் கணக்கு அடிப்படையில் பார்க்கப்படுகிறது. ஜோதிட முறையிலும், முன்னோர்களின் வானியல் கணக்கின்படி ஏற்கனவே அக்னி நட்சத்திரத்தின் காலகட்டங்கள் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த 25 நாட்கள் சூரியனின் தாக்கம் நேரடியாக பூமியின் மேல் இருப்பதால், வெப்பம் கடுமையாக இருக்கும் என வானியல் ஆய்வாளர்களும், ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களும் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலத்திலும், தென்மேற்கு பருவமழை காலத்திற்கும் இடைப்பட்ட காலமாக கத்திரி வெயில் உள்ளது.

இந்தியாவை பொருத்தவரை இந்த காலகட்டத்தில் வடமாநிலங்களியே வெப்பம் மிக அதிகமாக இருக்கும். இந்த காலகட்டங்களில் சுபகாரியங்கள் நடத்தக்கூடாது. வேலைப்பளு இருக்கக்கூடாது, என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் கத்திரி வெயிலில் அலைந்தால் உடல் சூடாகி பாதிப்பு ஏற்படும் என்ற அறிவியல் உண்மை ஒளிந்து இருக்கத்தான் செய்கிறது.

இந்த 25 நாட்களில் நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்க குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

Categories

Tech |