Categories
பல்சுவை

அக்னி நட்சத்திரம் அன்று செய்யவேண்டியவை, செய்ய கூடாதவை…!!!

அக்னி நட்சத்திரம் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது எனபதை பற்றி பார்ப்போம்.

மே 4 முதல் 24 வரை அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு சித்திரை 21 ஆம் தேதி முதல் வைகாசி 14ஆம் தேதி வரை இருக்கும். கோட்சாரத்தில் சூரியன் மேஷ ராசியில் இருந்து, பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து, ரோகிணி நட்சத்திரம் 1ஆம் பாதம் வரை சஞ்சரிக்கும் காலம் வரை உள்ள நாட்கள் அக்னி நட்சத்திர காலம் ஆகும்.

இந்த காலகட்டத்தில் கோடையை தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். ஏழைகள், அந்தணர்கள், இயலாதவர்களுக்கு விசிறி,காலனி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்சாதம் கொடுப்பது விசேஷம்.

கோவில்களில் சிவன், விஷ்ணு, அம்மன், குமரக் கடவுள் வழிபாடு செய்யலாம். குமரன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் நீங்கும். கோவில்களில் இறைவன், இறைவிக்கு திருமஞ்சனம் அபிஷேகம் செய்வதும் அதை கண்குளிர காண்பதும் சிறப்பு.

இந்த காலங்களில் உஷ்ண நோய் பாதிக்காமல் இருக்க அரிசிமாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு,

அஸ்வ த்வஜாய வித்மஹே

பாஸ அஸ்தாய தீமஹி

தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

என்ற சூரிய காயத்ரி சொல்லி வழிபடுவது சிறப்பு. சிவாலயங்களில், சிவனின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தை தொங்கவிட்டு அதற்குள், வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை ஜடாமாஞ்சி, பன்னீர், பச்சை கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்த நீரை நிரப்புவார்கள்.

அந்த நீரின் துளிகள் களையத்தின் துளை வழியாக லிங்கத் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இப்படி அனைத்து கோவில்களிலும் ஜலதாரை வைப்பதால் இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது ஐதீகம்.

இந்த காலத்தில் செய்ய கூடாதவை:

இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது. நார் உரிக்க கூடாது, விதை விதைக்க கூடாது, கிணறு, குளம், தோட்டம் அமைக்கக்கூடாது. நிலம் மற்றும் வீடு பராமரிப்பு பணிகளை செய்யக்கூடாது. அதேபோல் நீண்ட தூரம் பயணம், பூமிபூஜை கிரகப்பிரவேசம், மொட்டை போடுதல் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.

Categories

Tech |