Categories
தேசிய செய்திகள்

அக்னிபத் வீரர்களுக்கு சம்பளம்…. 11 வங்கிகளுடன் இராணுவ ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!!

அக்னிபத் திட்டத்தின் கீழ் பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்களை 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் வீரர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் தொகுதி அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேர்வார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 4 வது வருடம் ரூ.40,000சம்பளம் ஆக இருக்கும்.

இந்நிலையில் அக்னிபத் வீரர்களுக்கு சம்பளம் வழங்க வங்கி வசதிகளை அளிக்கும் விதம்மாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கொடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளும் ராணுவ பரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.‌ அதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் லெப்டினன்ட் ஜெனரல் வி ஸ்ரீஹரி வங்கிகளின் மூத்த அதிகாரிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அக்னிவீரர் சம்பளம் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் பலன்கள் பாதுகாப்பு துறை சம்பளம் தொகுப்பை போல இருக்கும் என்றும், கூடுதலாக பணி நிறைவின்போது தொழில் முனைவராக மாற விரும்பும் அக்னி வீரர்களுக்கு வங்கிகள் கடன் உதவி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |