Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா

அக்ஷய் குமாரின் பிரம்மாண்டமான படம்… “3டி”-யில்வெளியீடு… படக்குழு முக்கிய அறிவிப்பு..!!

அக்ஷய் குமாரின் “பெல் பாட்டம்” படம் “3டி”யிலும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தி திரைப்படமான “பெல் பாட்டம்” அக்ஷய்குமார் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லாரா தத்தா, வாணி கபூர், ஹியூமா குரோஷி உள்ளிட்ட பலரும் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ளனர்.

லண்டனில் ஒரே கட்டமாக இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து “பெல் பாட்டம்” படம் ரிலீசாகவிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று 2-வது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி-யில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது.

ஆனால் திடீரென ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக படக்குழு ஓடிடி முடிவை கைவிட்டதோடு திரையரங்கில் ஆகஸ்ட் 19-ம் தேதி “பெல் பாட்டம்” வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது மிகப்பெரிய பிரம்மாண்ட படம் என்பதால் படக்குழுவினர் பெல் பாட்டம் படத்தை “3டி”யிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |