Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் உற்பத்தி ஆலை…. 1 கோடி மதிப்பில் எந்திரங்கள்…. மருத்துவரின் தகவல்….!!

ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அரசு மருத்துவமனைக்கு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் வரும் காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலை அமைப்பதற்கு 1 கோடி மதிப்பிலான எந்திரங்கள் வந்தடைந்தது.

எனவே மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டி.ஆர்.டி.ஓ) அமைப்பு பெங்களூரில் இருந்து அனுப்பிய ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலை எந்திரங்கள் பெரிய லாரியில் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்த எந்திரத்தை கட்டமைக்கும் பணிகள் துவங்கும் என்றும் இப்பணிகள் முடிவு பெற்று ஒரு வாரத்தில் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |