Categories
உலக செய்திகள்

”மலேசியாவின் புதிய மன்னர்” முடிசூட்டிய அல்-சுல்தான் அப்துல்லா ….!!

மலேசியாவின் புதிய மன்னராக அரச குடும்பத்தை சேர்ந்த அல்-சுல்தான் அப்துல்லா முடிசூடிக்கொண்டார்.

மலேசியாவில் மன்னரின் ஆட்சியின் கீழ் கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் இருந்து வருகின்றது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய மன்னரை தேர்ந்தெடுத்து அவரது தலைமையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அரசை நிர்வகித்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மலேசியாவின் மன்னராக பொறுப்பேற்ற 5-வது சுல்தான் அகமது, காரணம் எதுவும் சொல்லாமல் கடந்த ஜனவரி மாதம் தீடிரென தனது மன்னர் பதவியை ராஜினாமா செய்தார்.

மலேசியாவின் புதிய மன்னரானார் அல்-சுல்தான் அப்துல்லா

இதனை அடுத்து மலேசிய அரசை நிர்வகிக்க புதிய மன்னரை தேர்வு செய்யும் தேவை ஏற்பட்டது. இதை தொடர்ந்து மலேசியாவின் 9 மாநிலங்களை ஆளும் அரச குடும்பத்தின் ஒருவரான அல்-சுல்தான் அப்துல்லா மலேசியாவின் புதிய மன்னராக  தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இன்று மலேசியாவின் 16வது மன்னராக அவர் பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு முடிசூட்டப்பட்டது.

Categories

Tech |