அரியலூர் அருகே திருமணமாகாத இளம் பெண் கர்ப்பமான நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டு அலைபாயுதே பட பாணியில் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது .
அரியலூர் மாவட்டம் காரைகுறிச்சி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிவரஞ்சனி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மதன் சுதாகர் சிங் என்பவரை சிவரஞ்சனி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டதும்,
அலைபாயுதே பட பாணியில் திருமணத்தை மறைத்து இருவரும் அவரவர் வீட்டில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதன் சுதாகர் சிங்கின் வீட்டில் இருந்து பெண்ணை அழைத்து விசாரித்தபோது தான் கர்ப்பமானதையடுத்து காதலனை தேடி வந்ததாக தெரிவித்துள்ளார். இரு வீட்டாரும் காதலுக்கு ஆட்சியபனை தெரிவிக்காததால் இளம்பெண் காதலனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.