Categories
உலக செய்திகள்

அழகிகள் இப்படிதான் இருக்கனுமா….? பாரபட்சம் காட்ட கூடாது…. தொடரப்பட்ட வழக்கு….!!!

மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டி நடத்தி வந்த அமைப்பின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மிஸ்.பிரான்ஸ் போட்டி நடத்திய நிறுவனம், எண்டேமோள் தயாரிப்பு நிறுவனம் போன்றவைகள் மீது அந்நாட்டு பெண்ணிய அமைப்பு ஒன்றும், அழகிப்போட்டி தோற்ற 3 போட்டியாளர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு முன்பாக அழகிகளை தேர்வு செய்யும்போது அவர்கள் 5.58 அடி உயரம், திருமணம் முடியாமல் இருத்தல் மற்றும் அழகின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டது.

ஆனால் பிரான்ஸ் தொழிலாளர் சட்டத்தின்படி நிறுவனங்கள் பணிக்காக ஆட்களை தேர்வு செய்யும்போது நன்னடத்தை, வயது, குடும்ப அந்தஸ்து அல்லது தோற்றத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரீஸ் புறநகர்ப் பகுதி Bobigny என்ற இடத்தில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்றம் ஒன்றில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனால் அழகிப் போட்டியில் பங்கேற்பவர்களை நீதிபதிகள் தொழிலாளர்கள் என அங்கீகரிப்பார்களா..? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனாலும் 2013-ஆம் ஆண்டு இதேபோன்று மிஸ்டர் பிரான்ஸ் போட்டியில் பங்கேற்ற ஒருவருக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த வழக்கை தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |