வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தின் ஓபனிங் சாங் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் வைபவ் நடிப்பில் கடைசியான வெளியான மலேசியா அம்னீசியா எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் வைபவ் KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பரி.கே.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆலம்பனா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பார்வதி நாயர் நடித்துள்ளார்.
கலகலப்பு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான ஆலம்பனா படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஓபனிங் சாங் வெளியாகியுள்ளது.