கொரோனா கிருமிகளிடமிருந்து நாம் வாங்கும் மளிகை பொருட்களை பாதுகாத்து கொள்வதற்கு சில குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
உலகம் முழுவதும்கொரோனோவால் பல லட்சம் மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிமனிதன் சுத்தம் மற்றும் சுகாதாரம் போன்றவை மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு சமூக விலகலும் முக்கியமாக கடைபிடித்தாக வேண்டும். ஆனால் வீட்டிற்கு தேவையான அத்யாவசிய பொருட்களை வாங்குவதற்கு வெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வெளியே சென்று அத்யாவசிய பொருட்களை வாங்கி வரும்பொழுது அவற்றை கிருமிகள் இல்லாதவாறு சுத்தம் செய்து கொள்ளவேண்டும். வீட்டிற்கு வந்ததும். எப்போது வெளியில் சென்று மளிகை பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும். மேலும் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் போன்ற கேள்விகளும் தோன்றும். அவற்றைப் பற்றி இப்போது காண்போம். வீட்டிற்கான மளிகை பொருட்கள் வாங்கும் பொழுது அதில் அதிக கவனம் எடுத்து கொள்ளுங்கள்.
கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் செல்லுங்கள்:
உணவு மற்றும் மளிகை பொருட்களுக்கான தேவை எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம். எனவே அவைகளை கடைக்கு சென்று வாங்கும் அவசியம் அடிக்கடி ஏற்படக்கூடும். அதற்காக வெளியே அடிக்கடி செல்லவேண்டிய அவசியம் ஏற்படும் அதை தவிர்த்துவிடுங்கள். இதற்கு முடிவாக, அத்தியாவசிய பொருட்களை ஒரே முறை வாங்கி வீட்டில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதனால் அவ்வப்போது கடைக்கு போய் வரும் நிலை குறையும். மேலும் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களைத் தவிர்க்கவும். எல்லோரும் சென்று வாங்கும் நேரத்தில் நீங்களும் கடைக்கு செல்வதால் கிருமி தாக்கும் அபாயம் உண்டு. மேலும் கடையில் கடைக்காரரிடம் போதிய இடைவெளி விட்டு பொருட்களை வாங்குங்கள்.
கையுறை அணிந்து கொள்ளுங்கள்:
மளிகை கடைக்கு செல்லும் போது கைகளில் கையுறை அணிந்து கொண்டு செல்லுங்கள். கடைக்கு செல்வதற்கு முன்னாடி என்ன தேவை என்பதை பற்றி ஒரு லிஸ்ட் தயார் செய்து கொள்ளுங்கள். இதனால் கடையில் கால தாமதம் ஏற்படாமல் விரைவாக வேலையை முடித்து விடலாம். வீட்டிற்கு வந்தவுடன் கைகளை சுத்தமாக கழுத்தை மறந்து விடாதீர்கள்.
கடையில் பொருட்களை வாங்கும் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம். அல்லது அவற்றை பயன்படுத்துவதற்கு முன்னர் சீராக சுத்தம் செய்து கொண்டு பயன்படுத்துங்கள் . மேலும் அடிக்கடி முகத்தை தொட வேண்டாம். கைகளில் க்ளோவ்ஸ் அணிந்திருந்தாலும் அவ்வப்போது முகத்தை தொடுவதால் தொற்று பரவும் வாய்ப்பு உண்டாகிறது.
உடல் நிலை சரியில்லாத நேரத்தில் கடைக்கு செல்லாதீர்கள்:
உங்களுக்கு மிதமான காய்ச்சல் இருப்பது உறுதியாக தெரிந்திருந்தால், வீட்டை விட்டு வெளியே எக்காரணத்தை கொண்டும் செல்லாதீர்கள். இந்நிலையில் நீங்கள் வெளியில் செல்வதால் எளிதாக தொற்று பாதிப்பு உண்டாகலாம். ஆகவே நீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் நோய் பாதிக்கப்பட்டிருந்தால் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்த்து கொள்ளவும்.
60 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு:
ஆன்லைனில் மளிகை பொருட்களை வாங்கி கொள்ளுங்கள், கொரோனா பாதிப்பு குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் அல்லது நாட்பட்ட மருத்துவ பாதிப்பு உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது. ஆகவே வயது முதிர்ந்தவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஆகவே 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியில் செல்வதை இந்நாட்களில் தவிர்த்துக் கொள்வது நல்லது.
இந்த சூழ்நிலையில் அவர்கள் வீட்டின் தேவைக்கு மளிகை பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம் . அல்லது மளிகை கடைக்கு போன் செய்து பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்து தரும்படி கேட்டுக் கொள்ளலாம். வீட்டில் வாசல் பகுதியில் பொருட்களை வைத்து விட்டுச் செல்ல சொல்லி விடலாம். அவற்றை எடுக்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவும். மளிகை பொருட்களை எடுத்தவுடன் கைகளை சுத்தமாக கழுவி அந்த இடத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.