Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யோ… அய்யோ… சேகர்பாபு இப்படி பண்ணுறாரே…. எல்லா சங்கிகளுக்கும் எரியும்… பாஜகவினரை கலாய்த்த உதயநிதி..!!

கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மழை வருகிறதோ இல்லையோ நான் விரைவில் பேசிவிட்டு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். எல்லோரும் கேட்கிறார்கள்.. அது என்ன திராவிட மாடல் ஆட்சி ? நம்முடைய தலைவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் திராவிட மாடல் ஆட்சி என்று….  எல்லோரும் கேட்கிறார்கள், அது என்ன திராவிட மாடல் ஆட்சி என்று ? இப்போது இங்கே சொல்கிறேன்…

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அல்லேலூயா என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கிறார், இதுதான் திராவிட மாடல் ஆட்சி. அவர் ரம்ஜானுக்கும் இதைவிட ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தினர். அவர் பார்ப்பதற்கு தான் இப்போதும் மாலையும்,  கழுத்தோடு இருப்பார். ஆனால் இதுதான் சமூக நீதி ஆட்சி, இதுதான் பெரியார் கற்றுக் கொடுத்தது, பேரறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்தது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கற்றுக் கொடுத்தது, இனமான பேராசிரியர் அவர்கள் கற்றுக் கொடுத்தது, அதைத்தான் நம்முடைய தலைவர் அவர்கள் திராவிட மாடல் ஆட்சி என்று நடத்திக் கொண்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் நானும் கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். இன்றைக்கு எல்லா சங்கிகளுக்கும் எரியும், சேகர்பாபு வந்து அல்லேலூயா என்கிறார், உதயநிதி போய் நானும் கிறிஸ்துவன் என்கிறார், நானும் சொல்வேன் நான் இஸ்லாமியர் என்று சொல்வேன். நான் படித்தது இதே  டான்போஸ்கோ பள்ளியில் தான். எழும்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் படித்தேன், அதன் பிறகு பட்டம் பெற்றது லைலா கல்லூரியில், நான் காதலித்து மணந்தது ஒரு கிறிஸ்தவ பெண். எனவே அந்த உரிமையோடு இந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்தார்.

Categories

Tech |