Categories
உலக செய்திகள்

ஐயோ தங்கச்சி! உறைந்த குளத்தில் விழுந்த…. தங்கையை காப்பாற்றி…. தன் உயிரை கொடுத்த அண்ணன்…!!

தங்கையை காப்பாற்ற குளத்தில் குதித்த 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் பெஞ்சமின்(10). இந்த சிறுவன் தன்னுடைய தங்கையுடன்  தங்களுடைய வீட்டில் பக்கத்தில் உள்ள உறைந்த குளத்தின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென்று அந்த ஆறு வயது சிறுமி குளத்தில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவெடுத்த சகோதரன் பெஞ்சமின் தன்னுடைய சகோதரியை காப்பாற்றுவதற்காக உறைந்த குளத்தில் குதித்து தண்ணீரில் இருந்து  வெளியேற்ற வெளியேற்ற முயன்றுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் தண்ணீரில் இருந்து வெளியேற முயன்றுள்ளனர்.

இந்நிலையில் உதவி கேட்டு குடியிருப்புக்கள் நுழைந்த இன்னொரு சகோதரன் தன்னுடைய தந்தையுடன் வந்து உள்ளான். ஆனால் அவரால் தன்னுடைய மகளை மட்டுமே குளத்திலிருந்து எடுக்க முடிந்ததுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சிறுவனை மீட்டு 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுவன் பெஞ்சமின் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தங்கையை காப்பாற்ற குளத்தில் குதித்த சிறுவன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |