நகைக்கடனுக்கு குழு போட்டது கண்துடைப்பு வேலை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள நகை கடன் தள்ளுபடி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நகைகடன் அதற்கு ஒரு குழு…. இந்த அரசை பொருத்தவரையில் ஒட்டுமொத்தமாக ஒரு குழு போட்டு கண்துடைப்பு வேலை, எல்லாத்துக்குமே. கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரி குழு போட்டால் அந்தோ கோவிந்தா…. குழு போட்டா அவ்வளவு தான் அது, அது சுத்த விடுகின்ற கதைதான், அது அதோட மறந்துவிட வேண்டியதுதான்.
திமுகவைப் பொறுத்தவரையில் குறுக்கு வழியில் எப்படியாவது உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வகையிலேயே அவர்கள் முயற்சிக்கின்றார். கடந்த 4 மாத காலத்திலிருந்து மக்கள் அவ்வளவு கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, சட்ட ஒழுங்கு ஒரு பக்கம் கடுமையான அளவிற்கு சீர்கேடு.
கிட்டத்தட்ட ஆளும் கட்சிக்காரர்கள் மதுபானம் கடத்தினத்தை சமூக ஆர்வலர் தகவல் சொல்கிறார். அவருடைய தலையை துண்டிப்பது, வெட்டிப்போட்டு இன்றைக்கு பெரிய அளவில் சட்ட ஒழுங்கு கெட்டு போய் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்த போதுதான் தமிழக அரசு விழித்துக் கொண்டு இன்றைக்கு வந்து ரவுடிகளை கைது செய்கிறார். அப்போது கிட்டத்தட்ட எந்த அளவிற்கு தமிழ்நாடு ரவுடிகளின் ராஜியமாக இருந்து வருகிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என விமர்சித்தார்.