இன்றைய நவீன காலகட்டத்தில் பலவிதமான நவீன கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. அதேபோல சாக்கடை களையும், கழிவுநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்வதற்கும் நவீன கருவிகள் வந்த நிலையிலும் அற்ப பணத்துக்காக மனிதர்களே அள்ளும் நிலை தற்போது நீடித்து வருகிறது. இதனால் உயிர் பலிகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் கழிவுநீர் தொட்டியை தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி பலியான பலியாகினர் மற்றும் தூய்மை பணியாளர் ஒருவரை வருவாய் கட்டாயப்படுத்தி மனிதக்கழிவுகளை அள்ள சொல்லியதால் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இரு சம்பவங்களும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது, “கழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உயிரிழப்புகள் குறித்து உரிய விசாரணை மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய உபகரணங்கள் கிடைக்க வேண்டும். மேலும் இதுபோன்ற உயிரிழப்புகள் நடப்பதை தவிர்க்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தியுள்ளார்.