தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க தமன் இசை அமைக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் வேள்பாரி நாவலை இயக்கப் போகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். இந்த படம் சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் 3 பாகங்களாக உருவாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, கேஜிஎஃப் நாயகன் யஷ் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது வேள்பாரி நாவலில் சங்கர் முதலில் விஜயை தான் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டு இருந்ததாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வேள்பாரி நாவல் படம் குறித்த கதையை இயக்குனர் சங்கர் நடிகர் விஜயிடம் கூறிய போது ஏதோ சில காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகி விட்டாராம். மேலும் இந்த தகவலை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் அந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் சூப்பராக இருந்திருக்குமே என்று கூறி வருத்தப்படுகிறார்கள்.