ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தையும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டு 50 நாட்களை கடந்தும் திகார் சிறையில் இருக்கக் கூடிய நிலையில் இன்று அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படடர். அப்போது ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை சார்பில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதற்க்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வைத்து விசாரிப்பதற்கு நீதிபதி 30 நிமிடங்கள் அனுமதி அளித்தார்.அதற்கு இங்கு வைத்து விசாரிக்க விரும்பவில்லை நாளை சிறையில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதனால் நாளை காலை 8.30 மணி_க்கு அமலாக்கத்துறையினர் நேரடியாக திகார் சிறைக்கு சென்று விசாரிக்க இருக்கிறார்கள். தேவைப்பட்டால் சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்கவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இதனால் நாளை காலை 8.30 மணிக்கு ப.சிதம்பரத்திடம் திகார் சிறைக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்துவார்கள். அதே நேரம் மறுநிமிடமே அவரை கைது செய்வதற்கும் அமலாக்கத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏனென்றால் நாளைய தினம் ப.சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவேதான் அவர் வெளியே வரக் கூடிய நிலை இருந்து விடக் கூடாது என்பதற்காக அவரை அமலாக்கத்துறை நாளை விசாரணை நடத்தி கைது செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதனால் நாளை உச்சநீதிமன்ற உத்தரவும் ப.சிதம்பரத்திற்கு பயனற்றுப் போய்யுள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.