Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!…. எங்க வீட்டுக்குள்ள வெள்ளம் வந்துட்டே…. பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ….. இவருக்கே இந்த நிலைமையா…..!!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்பிறகு இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.‌ அதன் பிறகு சென்னை மாநகராட்சியில் சில பகுதிகளில் 2 அடி முதல் 3 அடி வரை சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார். அதோடு  நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?. எங்கள் வீட்டின் முன்பு 2 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இசையமைப் பாளரின் வீட்டுக்குள்ளையே தண்ணீர் புகுந்து விட்டதா என்று வீடியோவை பார்த்த பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |