விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், ஜிபி முத்து தானாக வெளியேற, சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி மற்றும் நிவாஷ்னி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். நிவாஷ்னி எலிமினேட் செய்யப்பட்டதால் நெட்டிசன்கள் பலரும் வலைதளத்தில் அசல் சொன்னது நடந்து விட்டது என்று பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள். அதாவது அசல் வீட்டுக்குள் இருக்கும்போது ஒவ்வொரு பெண்களையும் தடவிக் கொண்டே இருப்பார். குறிப்பாக நிவாஷ்னியிடம் அதிக அளவில் நெருக்கம் காட்டினார். அசல் வீட்டை விட்டுப் போகும்போது நிவாஷ்னி அவரை கட்டிப்பிடித்து அழுதார்.
அப்போது அசல் இப்படி இருக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால் சீக்கிரம் வெளியே வா என்று கூறிவிட்டு சென்றார். அசல் வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து நிவாஷ்னி இருக்கும் இடம் தெரியாமல் வீட்டுக்குள் இருந்தார். அசல் சொன்னதால்தான் நிவாஷ்னி வீட்டுக்குள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு சீக்கிரமாக வெளியேறியதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். அதோடு வெளிநாட்டில் எவ்வளவோ பிரபலங்கள் இருக்கும் போது எதுவுமே செய்யாத நிவாஷ்னியை எதற்கு அழைத்து வந்தார்கள் எனவும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் அந்த புள்ளையை அசலிடம் இருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனவும் நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்க்கிறார்கள்.