அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செல்லனேரி கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மனைவி ஆஸ்துமா நோய்க்காக மாத்திரை சாப்பிட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் இதற்காக வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை சம்பத் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருக்கிறார்.
இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சம்பத்தை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சம்பத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.