Categories
இந்திய சினிமா சினிமா

“ஆபாச காட்சிகள்”… இந்துக்களை தொடர்ந்து முஸ்லீம்களும் பதான் படத்திற்கு கடும் எதிர்ப்பு….!!!!

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து “பதான்” என்ற இந்தி திரைப்படத்தில் ஜோடியாக நடித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரையரங்கிற்கு வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த  பாடலில் தீபிகா படுகோனே காவி உடையணிந்து இந்துக்கள் மனதை புண்படுத்தி இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனால் ஷாருக்கானின் கொடும்பாவியை எரித்தனர். இந்நிலையில் மத்தியபிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது “பாடல் காட்சியில் இடம்பெற்றுள்ள உடை மற்றும் பாடல் வரிகளை நீக்கவேண்டும்” என்று தெரிவித்தார். இதற்கிடையில் பதான் படத்தை புறக்கணிக்குமாறு ஹேஷ்டேக்கும் டிரெண்டானது. இந்த நிலையில் பதான் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த உலமாக்கள் பதான் திரைப்படத்தில் அளவுக்கு மீறிய ஆபாச காட்சிகள் உள்ளதாகவும் இஸ்லாமிய உணர்வுகளை பாதிக்கும் இந்த படத்தை தீவிரமாக தணிக்கை செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் பதான் படம் ஓடும் திரையரங்குகளை தீயிட்டு கொளுத்த வேண்டும் என அயோத்தியின் ஹனுமன் காரி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது..

Categories

Tech |